“மாடு மேய்க்கும் குழந்தைகள்” -பள்ளி மூடியதால் பரிதாப நிலை

 

“மாடு மேய்க்கும் குழந்தைகள்” -பள்ளி மூடியதால் பரிதாப நிலை

கொரானாவை கட்டுப்படுத்த உலகிலுள்ள பள்ளிகளெல்லாம் மூடப்பட்டதால் உலகில் கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வி கற்க முடியாததால் மூன்றில் ஒரு குழந்தை படிப்பை நிறுத்தியுள்ளதாக யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.

“மாடு மேய்க்கும் குழந்தைகள்” -பள்ளி மூடியதால் பரிதாப நிலை


ஐ .நா, வின் யுனிசெப் அமைப்பு இந்த கொரானா காரணத்தால் பள்ளிகள் மூடப்பட்டதால் உலகில் 1.5 பில்லியன் குழந்தைகள் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளது .மேலும் அதன் தலைவர் ஹென்ரிட்டா கூறுகையில் ,உலகில் 463 மில்லியன் குழந்தைகளுக்கு நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியால் கிடைக்கும் ஆன் லைன் கல்வி ,தொலை தூரக்கல்வி போன்ற எதுவும் சென்றடையவில்லையென்றும் ,இதனால் பல இடங்களில் குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலையில் இருப்பதாகவும் ,பல கிராமப்புற மாணவர்கள் ஆசிரியர்கள் திட்டுவது போல மாடு மேய்க்க சென்று விட்டதாகவும் கூறியுள்ளார் .


மேலும் இதனால் ஆபிரிக்க மற்றும் தெற்காசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட அங்கு 147 மில்லியன் குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் இருப்பதாக கூறினார் .இங்குள்ள குழந்தைகளுக்கு இணைய வழி மற்றும் வானொலி வழி மற்றும் தொலைக்காட்சி வழி கல்வியெதுவும் போய் சேராததால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் தங்களின் குல தொழிலை பார்க்க சென்று விட்டதாகவும் ,யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது .

“மாடு மேய்க்கும் குழந்தைகள்” -பள்ளி மூடியதால் பரிதாப நிலை