”30% மின்சார வாகனங்கள் ஓடினால் – கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.1 லட்சம் கோடி மிச்சம்” – ஆய்வில் தகவல்

”30% மின்சார வாகனங்கள் ஓடினால் – கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.1 லட்சம் கோடி மிச்சம்” – ஆய்வில் தகவல்

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் புதிய வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு 30 சதவீதத்தை அடையும் பட்சத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இந்தியா சேமிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

”30% மின்சார வாகனங்கள் ஓடினால் – கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.1 லட்சம் கோடி மிச்சம்” – ஆய்வில் தகவல்

சக்தி சஸ்டெயினபிள் எனர்ஜி பவுண்டேஷன் நிறுவனம் உதவியுடன், நீர், எரிசக்தி, சுற்றுச்சூழலுக்கான கவுன்சில் இந்த ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவின்படி, 2030ம் ஆண்டுக்குள் நாட்டில் புதிதாக வாங்கப்படும் வாகனங்களில் 30 சதவீதம் மின்சார வாகனங்கள் இருக்கும்பட்சத்தில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதும் கணிசமாக குறையும் என்றும் குறிப்பாக, நைட்ரஜன் ஆக்சைட் மற்றும் டைஆக்சைட் எமிஷன் 17 சதவீதமும், கார்பன் மோனாக்சைட் 18 சதவீதமும் காற்றில் மாசு ஏற்படுவது குறையும் என தெரியவந்துள்ளது.

”30% மின்சார வாகனங்கள் ஓடினால் – கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.1 லட்சம் கோடி மிச்சம்” – ஆய்வில் தகவல்

இதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இந்தியா மிச்சப்படுத்த முடியும் என்றும் அதில் தெரியவந்துள்ளது.மேலும், மின்சார வாகனங்கள் பயன்பாடு நாட்டில் அதிகரிக்கும்போது, அது தொடர்பான பவர்டிரெய்ன் பேட்டரி மற்றும் பப்ளிக் சார்ஜர்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு விரிவடையும் என்றும் அதில் தெரியவந்துள்ளது.

”30% மின்சார வாகனங்கள் ஓடினால் – கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.1 லட்சம் கோடி மிச்சம்” – ஆய்வில் தகவல்

மேலும், மின்சார வாகனங்கள் சந்தை விரிவடைவதுடன், அது சார்ந்த முதலீடுகள் அதிகரித்து, 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

  • எஸ். முத்துக்குமார்