30 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்!

மருத்துவ மாணவர்கள், பணியாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,982பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,342பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 30 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அம்மருத்துவமனையின் முதல்வர், கொரோனா தொற்று ஏற்பட்ட 4500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளித்துள்ளது எங்கள் மருத்துவமனை. இதுவரை இந்த பணிகளில் ஈடுபட்ட எங்களின் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், பணியாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் கடந்த 2 நாட்களில் 30 மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் யாருக்கும் அறிகுறிகள் இல்லை. நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர். களப்பணியில் ஈடுப்படுவோருக்கு அதிகமாக தொற்று ஏற்படும் நிலையில் நோயாளிகளின் அருகில் இருந்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படும். ஆனால் அது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே உள்ளது” என்றார்.

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...