30 வருடங்களுக்குப் பிறகு சல்மான்கான் ஹீரோயினுக்கு வந்த சோதனை!

 

30 வருடங்களுக்குப் பிறகு சல்மான்கான் ஹீரோயினுக்கு வந்த சோதனை!

சர்ச்சைகளுக்கும், கைதுகளுக்கும், வழக்குகளுக்கும் சல்மானுக்கும் ரொம்ப தூரம் இல்ல பாருங்க. அதுபோக, பாக்யஸ்ரீ அறிமுகமானதே சல்மான் படத்தில்தான். அவ்வளவுதான் சல்மானுக்கும் இந்த வழக்குக்குமான தொடர்பு. இது போதாதா சல்மான் பாயை கோத்துவிட. மத்தபடி வீ லவ் சல்மான் கானுங்க!

1989ஆம் ஆண்டு வெளியானது மெய்ன் பியார் கியா என்கிற இந்திப்படம். சல்மான்கான் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமானவர் பாக்யஸ்ரீ. முப்பது வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். சல்மான்கான் மிக முன்னணி நடிகர், பிக் ஸ் நிகழ்ச்சி ஆங்கர். இந்தப்பக்கம் பாக்யஸ்ரீ சில படங்களில் நடித்துவிட்டு, திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு செட்டில் ஆகிவிட்டார். இன்னும் சொல்லப்போனால், பாக்யஸ்ரீ – ஹிமாலயா த‌சானி ஜோடியின் மகன் அபிமன்யுகூட கடந்தவருடம் இந்திப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிவிட்டார்.

Bhagyashree - Dasani

சரி, இப்போ பிரச்னை என்ன? மும்பையைச் சுற்றி பெரிய அளவில் நடந்துவந்த சூதாட்ட கும்பலை காவல்துறை சுற்றிவளைத்து பிடித்திருக்கிறது. சூதாட்டக்கும்பலின் முக்கிய புள்ளியாக செயல்பட்டவரென காவல்துறை அடையாளம் காட்டியிருப்பது பாக்யஸ்ரீயின் கணவர் தசானியை. மும்பை அந்தேரியையொட்டிய‌ பகுதிகளில் அதிகமாக சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவல்கள் அடிப்படையில் கடந்தவாரம் சிலரை அந்தோலி காவல்நிலைய போலீசார் கைது செய்திருந்தார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் தசானி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Maine Pyaar Kiya

சரி, இந்த கைதுக்கும் ச‌ல்மான் கானுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எதற்கு தலைப்பில் அவர் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது? சர்ச்சைகளுக்கும், கைதுகளுக்கும், வழக்குகளுக்கும் சல்மானுக்கும் ரொம்ப தூரம் இல்ல பாருங்க. அதுபோக, பாக்யஸ்ரீ அறிமுகமானதே சல்மான் படத்தில்தான். அவ்வளவுதான் சல்மானுக்கும் இந்த வழக்குக்குமான தொடர்பு. இது போதாதா சல்மான் பாயை கோத்துவிட. மத்தபடி வீ லவ் சல்மான் கானுங்க!