30 நாளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி! இப்பம் சொல்லுங்க மக்கள் கையில் காசு இருக்கா, இல்லையா?

 

30 நாளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி! இப்பம் சொல்லுங்க மக்கள் கையில் காசு இருக்கா, இல்லையா?

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் நம் நாட்டு தங்க வர்த்தகர்கள் சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்துள்ளனர். பண்டிகை காலம் வேறு தொடங்கி விட்டதால் வரும் மாதங்களில் தங்கம் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில் எப்போதும் தங்கத்துக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் நம்மவர்கள் கருதுவதில்லை அதனை சிறந்த முதலீடாகவும் கருதுவதே இதற்கு முக்கிய காரணம். அதேசமயம் நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவுக்குதான் உள்ளது. அதனால் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படுகிறது.

தங்க நகைகள்
 
கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதியாகியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் சுமார் 50 சதவீதத்துக்கு மேல் குறைவாகும். இருப்பினும், தற்போது பண்டிகை மற்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் திருமண காலம் தொடங்கி விடும் வரும் மாதங்களில் தங்கம் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தங்க நாணயங்கள்

கடந்த செப்டம்பர் மாதத்தில் நம் நாடு 2,600 கோடி டாலருக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் 3,689 கோடி டாலருக்கு சரக்குகளை இறக்குமதி செய்துள்ளது. இதனால் அந்த மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,086 கோடி டாலராக உள்ளது. ஏற்றமதிக்கும்,இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம்தான் வர்ததகபற்றாக்குறை ஆகும்.