30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க கூடாது என ரசிகர்களுக்கு கூறிவிட்டேன் – பிக்பாஸில் கமல்ஹாசன்

30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க கூடாது என ரசிகர்களுக்கு கூறிவிட்டேன் – பிக்பாஸில் கமல்ஹாசன்

30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க வேண்டாம் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க வேண்டாம் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை பள்ளிகரணை அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததால், இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக இருந்துவரும் ஜெயகோபாலின் மகள் திருமணத்திற்கு வைக்கப்பட்ட பேனர் தான் சுபஸ்ரீயின் மீது விழுந்து அவரது உயிர் பிரிய காரணமாக அமைந்தது. இதையடுத்து ஜெயகோபால் மீது பள்ளிகரணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைப்பது மற்றும்  பால் அபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களை வேண்டாம் என்று என் ரசிகர்களுக்கு கூறி இருக்கிறேன்  கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறினார்.