30 ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கவிருக்கும் இந்தோனேசிய நகரம்!

 

30 ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கவிருக்கும் இந்தோனேசிய நகரம்!

சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தோனேசியா எரிமலைகளின் வளையத்தில் அமைந்திருப்பதால் நில நடுக்கம், சுனாமி தவிர எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்களும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன

ஜகர்த்தா: இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தா இன்னும் 30 ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு நடுவில் அமைந்துள்ள, தீவுகளின் நாடு என்றழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, உலகில் நிலநடுக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் அமைந்துள்ளது. இதனால், அங்கு நிலநடுக்கமும், சுனாமியும் அடிக்கடி நிகழ்ந்து, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர்.

indonesia

சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தோனேசியா எரிமலைகளின் வளையத்தில் அமைந்திருப்பதால் நில நடுக்கம், சுனாமி தவிர எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்களும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் லட்சக்கணக்கான மக்கள் இங்கிருந்து குடிபெயர்ந்து விடும் சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர்.

indonesia

இந்நிலையில், இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தா கடந்த பத்து ஆண்டுகளில் 8 அடி மூழ்கியிருப்பதாகவும், அந்நகரத்தின் பெரும் பகுதி 2050-ஆம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கிவிடும் என ஆய்வாளர்கள் கருதி எச்சரிக்கை விடுத்துள்ளதாலும், தலைநகர் ஜகர்த்தாவை ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

indonesia

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தா மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் சுமார் மூன்று கோடி பேர் வசித்து வருகின்றனர். பெரிய நகரங்களில் மக்கள் நெருக்கடியை கட்டுப்படுத்தவும், புதிய நகரங்களை உருவாக்கி மக்களை அங்கு குடியமர்த்தவும் இந்தோனேசிய அரசு தீர்மானித்துள்ளதால், முதற்கட்ட நடவடிக்கையாக தலைநகர் ஜகர்த்தாவை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.