• December
    14
    Saturday

Main Area

Main



போதை ஊசி போட்டுக் கொண்ட இளைஞர்கள்; கையும்களவுமாக பிடித்த திருச்சி போலீசார்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

திருச்சி: கல்லூரி விடுதியின் அருகே போதை ஊசிக் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களை திருச்சி போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு ரோந்து சென்ற போலீசார், அக்கல்லூரி விடுதியின் பின்புறம் போதை ஊசி போட்டுக் கொண்டிருந்த காஜா மொய்தீன் (22), வினோத் (25), யுரேன் சந்த் (21) ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

drug

அத்துடன் அவர்களிடம் இருந்து போதை ஊசி, மருந்துகள், மாத்திரைகளை கிருமி நீக்கப்பட்ட தண்ணீருடன் கலக்கும் கப், ரொக்கப் பணம் ரூ.2,000, கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

drug

இதுகுறித்து போலீசார் கூறுகையில், புதுச்சேரியில் இருந்து ரூ.250-க்கு 10 மாத்திரைகளை வாங்கி வந்து திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்கள் உள்பட் பல்வேறு நபர்களுக்கு ரூ.700-க்கு காஜா விற்று வந்துள்ளார். நேஷனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, பிஷப் ஹெப்பர் கல்லூரி மாணவர்களிடம் தனது போதை மருந்தை காஜா சந்தைப்படுத்தி வந்துள்ளார்.

arrest

கைது செய்யப்பட்டுள்ள மற்ற இரு இளைஞர்கள் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவர்கள். இவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.