ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மூன்று தீவிரவாதிகள் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை முடிவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் சம்பவ இடத்திலிருந்து ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டது. முன்னதாக கடந்த ஜூன் 26 அன்று புல்வாமா மாவட்டத்தின் டிராலில் உள்ள சேவா உல்லர் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...