Home இந்தியா அமேசான் போன்ற ஓடிடி தளங்களுக்கும் இனி சென்சார் - அதிரடி காட்டிய மத்திய அரசு!

அமேசான் போன்ற ஓடிடி தளங்களுக்கும் இனி சென்சார் – அதிரடி காட்டிய மத்திய அரசு!

மக்களிடம் அதிகமாக ஸ்மார்ட்போன்கள் புழங்காத வரை இந்தியாவில் ஒருசிலரே அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களைப் பயன்படுத்திவந்தனர். இதனால் அதில் வரும் படங்கள், தொடர்கள், நேரடி ஓடிடி திரைப்படங்கள் குறித்த எந்தக் கவலையும் மத்திய அரசுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் ஏராளமானோரின் கைகளில் ஸ்மார்ட்போன்கள் தஞ்சமடைந்ததால் ஓடிடி தளங்களும் பிரபலமடைந்தன.

List Of Popular OTT Apps In India - Gizbot News

அவற்றின் வருவாயும் அதிகரித்தது. அதேசமயம் அதில் வந்த உள்ளடக்கங்களின் தீவிரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்துத்துவத்தை அடித்து நொறுக்கும் தொடர்கள் வெளியாகி சர்ச்சைகளை எழுப்பின. இதன்பிறகே மத்திய அரசின் கூர்விழிப் பார்வை ஓடிடி தளங்கள் மீது பாய்ந்தது. அப்போதே ஓடிடி தளங்களுக்கும் சென்சார் போன்ற ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அரசுத் தரப்பில் முணுமுணுக்கப்பட்டது. தற்போது அது ஊர்ஜிதமாகியிருக்கிறது. இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கரும் கூட்டாகச் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.

Are web series replacing Indian television or movies? – Neuronerdz

டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள், சமூக வலைதள ஊடகங்கள், ஓடிடி தளங்கள் ஆகிய மூன்றையும் அரசின் கழுகுப் பார்வையில் சுற்றிவளைக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “சமூக ஊடகங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதை அரசு வரவேற்கிறது. அதேசமயம் நாகரிகமற்ற முறையில் வெளியாகும் சில உள்ளடக்கங்கள் குறித்த புகார்கள் எங்களுக்கு தொடர்ந்துவந்துகொண்டே இருக்கின்றன. பயங்கரவாதிகளும் இதைப் பயன்படுத்துவதால் வெறுப்புணர்வு வளர்க்கப்படுகிறது. அதேபோல போலிச் செய்திகளும் பரப்பப்படுகின்றன.

Electronics gets Rs 40,995cr boost - Telegraph India

இதுபோன்ற விவகாரங்களைக் கருத்தில்கொண்டு வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு தளங்களும் புகார்களைக் கையாளும் தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். அதேபோன்று சர்ச்சைக்குரிய பதிவுகளை முதலில் பதிவிட்டவரின் விவரத்தையும் அரசு கேட்டால் உடனடியாகப் பகிர வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, வெளிநாடுகளுடனான உறவுகள், பாலியல் வல்லுறவு, பாலியல் உணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்கள் உள்ளிட்டவை தொடர்பாக புகார்கள் வந்தாலோ, ஆட்சேபகர தகவல்கள் பகிர்வதாக தெரிய வந்தாலோ, இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி அரசுத்துறை நடவடிக்கை எடுக்கும்” என்றனர்.

Impact Of Digital Media - Digitng.com

விதிமுறைகளில் இருக்கும் மேற்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

ஓடிடி தளங்களில் திரையிடும் படங்கள் தொடர்பான பார்வையாளர் காணும் நெறிகளை U, U/A 7+, U/A 13+, U/A 16+, A (18+) என்ற வகைப்பாடுகளைக் காட்டும் வகையில் செயலியை வடிவமைக்க வேண்டும். இதற்கான தணிக்கைச் சான்றிதழ் பெறுவது கட்டாயம். பதிமூன்று வயதுக்கு மேற்பட்டோர் காணக்கூடிய படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகளாக இருந்தால், அதை 13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க முடியாதவாறு கடவுச்சொல் போட்டு பூட்டும் வசதி ஓடிடி செயலியில் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல வயது வந்தவர்களுக்கான (18+) A சர்டிபிகேட் படங்களை பார்க்கும் முன் அதைக் காண்போரின் வயதைச் சரிபார்க்கும் வழிமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும்.

How is a Film Certified by the Censor Board (CBFC)?

செய்திகளை வழங்கும் டிஜிட்டல் ஊடகங்கள், இந்திய பத்திரிகை கவுன்சில் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்ட விதிகளின்படி செய்திகள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். செய்தித்தாள்களுடன் போட்டிபோடும் நேர்த்தியான தளமாக டிஜிட்டல் ஊடகங்கள் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனால் போலிச் செய்திகள் பரவுவத தடுக்கப்படும்.

Digital Media Certificate | Michigan State University

புகார்களைத் தீர்க்கும் கட்டமைப்பை மூன்று கட்டங்களாக அணுகும் வகையில் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள், ஓடிடி தளங்கள், சமூக வலைதளங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றன. முதல் நிலையில் பதிப்பாளர் (எடிட்டர்), இரண்டாம் நிலையில் சுய ஒழுங்குமுறை அமைப்பு, மூன்றாம் நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் மேற்பார்வைக்குழு என அந்த வசதிகள் இருக்கும். புகார்களுக்கு விரைவாகத் தீர்வு அளிக்கும் நோக்கமாக இந்த நடைமுறை கையாளப்பட வேண்டும்.

Social media: How might it be regulated? - BBC News

சுய ஒழுங்குமுறை அமைப்புக்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியோ, உயர் நீதிமன்ற நீதிபதியோ குறிப்பிட்ட துறையில் நிபுணராக இருப்பவரோ தலைவராக இருந்து பதிப்பாளருக்கு அறிவுறுத்தல்களை வழங்குவார். இந்தச் செயல் வரைவின் நோக்கம் அரசின் தலையீட்டைக் குறைப்பதே. அதை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் மேற்கண்ட நடைமுறைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கையாள வேண்டும்.

A Chronological History of Social Media

இந்தப் புதிய விதிமுறைகள் மூன்று தளங்களுக்கும் மூன்று விதமான பயனை அளிப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது. இதன்மூலம் ஒலி மற்றும் ஒளிபரப்பு சேவை ஒழுங்குப்படுத்தப்பட்டு அத்துறைகள் முன்னேற உதவும். நாட்டு மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரம் ஊக்குவிக்கப்படும். இதனால் குழந்தைகள் ஆபாச படங்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். அதேபோல செய்தி ஊடகங்களில் போலிச் செய்திகள் பரவுவது கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு மத்திய அரசு கூறியிருக்கிறது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews