வூகான் ஆய்வகம்… ‘அந்த’ 3 ஆராய்ச்சியார்களுக்கு கொரோனா – சீனா மறைத்த சீக்ரெட்!

 

வூகான் ஆய்வகம்… ‘அந்த’ 3 ஆராய்ச்சியார்களுக்கு கொரோனா – சீனா மறைத்த சீக்ரெட்!

அனைவருக்கும் கொரோனா என்று சொன்னாலே சீனாவின் வூகான் மாகாணம் தான் நினைவுக்கு வரும். இன்று ஒட்டுமொத்த உலகத்தை குறிப்பாக இந்தியாவை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது கொரோனா எனும் மாபெரும் தொற்று. கொரோனா வைரஸின் பிறப்பிடம் என வூகான் மாகாணம் அறியப்படுகிறது. உலகத்துக்கே பரப்பிவிட்ட வூகான் இன்று அமைதிப் பூங்காவாக இருக்கிறது. அப்போது இருந்து இப்போது வரை கொரோனா வைரஸின் தோற்றம் ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

வூகான் ஆய்வகம்… ‘அந்த’ 3 ஆராய்ச்சியார்களுக்கு கொரோனா – சீனா மறைத்த சீக்ரெட்!

அது சீனாவிலுள்ள ஆய்வகத்திலிருந்து தான் உருவாக்கப்பட்டது என அமெரிக்கா அடித்துச் சொன்னது. குறிப்பாக முன்னாள் அதிபர் டிரம்ப், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகிய இருவரும் கடந்தாண்டிலிருந்தே சீனா மீது பகீரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர். மூன்றாம் உலகப் போரை உருவாக்க சீனா செய்த சதி என்றும், அவர்களின் பயோ வார் என்றும் கொரோனா வைரஸ் தோன்றல் குறித்து தத்தமது அதிருப்திகளை வெளிப்படுத்துகின்றனர். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய மைக் பாம்பியோ இதே கருத்தையே முன்வைத்தார்.

வூகான் ஆய்வகம்… ‘அந்த’ 3 ஆராய்ச்சியார்களுக்கு கொரோனா – சீனா மறைத்த சீக்ரெட்!

உலகின் பல நாடுகளும் இதே கருத்தை வழிமொழிந்தன. இவை யாவும் உண்மை எனவும், கொரோனா வைரஸ் பரவலுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு சார்ஸ் கொரோனா எஸ் என்ற வைரஸை தனது எதிரி நாடுகளுக்கு மட்டுமன்றி, தங்களுடன் போர் தொடுக்கும் நாட்டிலும் பரவவிடலாம். இந்த வைரஸை ஓர் உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என சீன அரசு ராணுவமும், அந்நாட்டு சுகாதாரத் துறையும் விஞ்ஞானிகளும் திட்டமிட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஊடகம் சமீபத்தில் செய்தி வெளியிட்டது. இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

வூகான் ஆய்வகம்… ‘அந்த’ 3 ஆராய்ச்சியார்களுக்கு கொரோனா – சீனா மறைத்த சீக்ரெட்!

இச்சூழலில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சீனாவில் வூகான் மாகாணத்தில் உலகின் முதல் கொரோனா தொற்று 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பதிவானதாக சீனா தெரிவித்தது. உலக சுகாதார அமைப்பிடமும் இதுதொடர்பாக அறிக்கை சமர்பித்தது. ஆனால் முதல் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வுகான் தொற்றுநோய் ஆய்வகம் ஒன்றில் பணிபுரிந்து 3 ஆராய்ச்சியாளர்கள் நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படுக்கிறது. நவம்பர் மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற அவர்களுக்கு கொரோனா சம்பந்தமான அறிகுறிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வூகான் ஆய்வகம்… ‘அந்த’ 3 ஆராய்ச்சியார்களுக்கு கொரோனா – சீனா மறைத்த சீக்ரெட்!


அவர்கள் எந்த மருத்துவமனையில் எந்த நேரத்தில் சிகிச்சை பெற்றார்கள் என்பது வரை அமெரிக்க உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது. அதற்கான அறிக்கையையும் வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்தக் குழப்பம் நீடித்துவரும் நிலையில், ஐநாவின் உண்மை கண்டறியும் குழு வுகானில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த ஆய்வு முடிவுகள் வெளிவரும் போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.