Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் உணவை மென்று சாப்பிடாவிட்டால் எதிர்கொள்ளும் 3 சிக்கல்கள்!

உணவை மென்று சாப்பிடாவிட்டால் எதிர்கொள்ளும் 3 சிக்கல்கள்!

உடலும் மனமும் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்க ஆரோக்கியமான உணவுகள் முக்கியம். சத்தற்ற உணவுகளைச் சாப்பிடும்போது முதலில் உடல் பலவீனமாகிறது. நோயுற்ற உடலைப் பற்றிய சிந்தனையில் மனமும் தன்னம்பிக்கை அற்று போய்விடுகிறது.

நமது உழைப்பை நேர்த்தியாகச் செலுத்தவும், ஒரு நாளை, ஒரு வாரத்தை, ஒரு மாதத்தை, எதிர்காலத்தை ஒழுங்குடன் திட்டமிட்டுக் கொள்ளவும் ஆரோக்கியமான உணவு முறை அவசியம். அதனால், ஜங் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தில் சிக்கிக்கொள்ளாமல் நன்கு சத்துகள் நிறைந்த உணவு வகைகளை நம் உணவு முறையாக அமைத்துக்கொள்ளல் மிகவும் முக்கியம்.

little india

சரி, நல்ல உணவுகளைத் தேடி சமைத்துவிட்டோம். ஆனால், அதை சாப்பிடும் முறையையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இத்தனை சிரமப்பட்டு சமைத்த உணவின் முழு பலனும் சாப்பிடும் முறையால் கிடைக்காமல் போய்விட வாய்ப்பிருக்கிறது.

நாம் உணவை வாய்க்குள் வைத்ததும் 20 நொடிகள்கூட நேரம் எடுத்து மென்று சாப்பிட வேண்டும். அவசரம் காட்டக்கூடாது. நாம் உணவை மென்று சாப்பிடாவிட்டால் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவை குறித்து பார்ப்போம்.

ஒன்று: உணவை நன்கு மென்று சாப்பிடும்போது அதன் சுவை தெரியும். அதனால், சாப்பிட்ட திருப்தியை அடைய முடியும். மேலும், நமக்குத் தேவையான உணவை மட்டுமே சாப்பிடுவோம். மெல்ல மென்று சாப்பிடும்போது செரிமான உறுப்புகளுக்கு ஏற்றவாறு வயிற்றுக்குள் உணவுச் செல்லும். உமிழ்நீரும் போதுமான அளவு கலந்திருக்கும். அதனால், செரிமானச் சிக்கல் வர வாய்ப்பிருக்காது.

இப்படி அல்லாமல், அவசரம் அவசரமாகச் சாப்பிடும்போது போது சுவையும் தெரியாது. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவும் தெரியாது. அதனால், அதிக உணவை எடுத்துகொள்ள நேரிடலாம். அதனால் செரிமான சிக்கல் ஏற்படக்கூடும்.

இரண்டு: உணவை நன்கு வாயில் வைத்து நிதானமாக மென்று கூழ் போலானாதும் விழுங்கினால் போதுமானது. அப்படி மெல்லும்போது பற்கள் பலமடையும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவுடன் உமிழ்நீரும் கலந்து, பற்கள் இடையே உணவுத் துணுக்குள், இறைச்சித் துணுக்குகள் புகுமால் உணவோடு சேர்ந்து வயிற்றுக்குள் சென்றுவிடும்.

மாறாக, வேகம் வேகமாக உணவை மெல்லாமல் சாப்பிடும்போது உணவுத் துணுக்குகள் பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு கிருமிகள் உருவாக வாய்ப்பாக அமைந்துவிடும். இதனால், பற்களும் ஈறுகளும் பலவீனமடைய அதிக வாய்ப்புகள் உண்டு.

மூன்று: உணவை மென்று சாப்பிடும் பழக்கம் மிகவும் அவசியம். அப்படிப் பழக்கமில்லாதவர்கள் தினமும் மெல்லாமல் முழுசு முழுசாகச் சாப்பிடுபவர்களுக்கு உப்புசம், வாயுத் தொல்லைகள், எதுக்களித்தல், செரிமான சிக்கல், சத்துகள் போதுமான அளவு கிடைக்காதது உள்ளிட்டவையால் சிரமம்ப்படுவார்கள்.

சாப்பிடும்போது டிவி, புத்தகம், மொபைல் என வேறெதிலும் கவனம் செலுத்தாமல், உணவை நன்கு பார்த்து, சுவைத்து, மென்று சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கவனத்தை வேறு எதிலாவது வைத்துக்கொண்டே சாப்பிடுவதால் அதிகளவு சாப்பிடுவது, மென்று சாப்பிடுவது நின்று போகவும் வாய்ப்பிருக்கிறது.

மேலும், நேரம் கொடுத்து சமைத்தவரின் உழைப்பை நாம் அவமதிப்பு செய்வதைப் போலவும் அவர் நினைக்கக்கூடும். உணவு என்பது பசிக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தின் முதன்மையான பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டாலே விருப்பத்தோடு உணவை உண்ணத் தொடங்கிவிடுவோம். அலட்சியம் காட்ட மாட்டோம்.

Most Popular

ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி… களைகட்டிய பீகார் தேர்தல்

ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

மத்திய பிரதேச பெண்கள் மற்றும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ்.. சிந்தியா விளாசல்

மத்திய பிரதேச இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என பா.ஜ.க. எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா கடுமையாக விமர்சனம் செய்தார். மத்திய...

பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும்.. எச்சரிக்கும் நிதி ஆயோக் உறுப்பினர்.. கட்டுப்பாடுகளை தளர்த்தும் மாநிலங்கள்

பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கும் அதேவேளையில், மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கி உள்ளன. நிதி...

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை.. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மலையை வெட்டி கால்வாய் ஏற்படுத்திய பெண்கள்

மத்திய பிரதேசத்தில் கிராமத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க, பெண்களாக இணைந்து மலையிலிருந்து தண்ணீர் குளத்துக்கு செல்லும் வகையில் கால்வாய் வெட்டிய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகி பெரும்...
Do NOT follow this link or you will be banned from the site!