3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 

3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்துதல் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அப்போது, 2016ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின்படி தனியார் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இடங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும், அரசு துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்ற நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், அந்தியூர்-மைசூர் சாலையில் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவுசெய்த மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணிநேர வேலையும், முழுநேர ஊதியம் வழங்க வலியுறுத்தினர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியறுத்தி 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்த போராட்டக்காரர்கள், தங்களுடைய கோரிக்கைக்கு முடிவு கிடைக்கும் வரை கலைந்துசெல்ல மாட்டோம் என அறிவித்தனர். இதனையடுத்து, அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.