உயிரிழந்தவரின் உடலை தூக்கி வீசியதால் 3 பேர் பணிநீக்கம் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

 

உயிரிழந்தவரின் உடலை தூக்கி வீசியதால் 3 பேர் பணிநீக்கம் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

40 வயது மதிக்கத்தக்க சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மயக்கநிலைக்கு செல்ல உறவினர்கள் அவரை மருத்துவமனை அழைத்து சென்றனர்.

உயிரிழந்தவரின் உடலை தூக்கி வீசியதால் 3 பேர் பணிநீக்கம் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

ஆனால் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவருக்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா இருப்பது தெரியவந்தது. அந்த நபரின் உடலை கோபாலன்கடை மயானத்திற்கு கொண்டு சென்ற போலீசார், வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து பேசிய புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர், ஊழியர்கள் பதற்றத்தில் இருந்ததால் அவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்தார். இந்நிலையில், உயிரிழந்தவரின் உடலை தூக்கி வீசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.