‘மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை’..3 நாட்களில் 3 பேர் மரணம்.. பீதியில் மக்கள்!

 

‘மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை’..3 நாட்களில் 3 பேர் மரணம்.. பீதியில் மக்கள்!

சமீப காலமாக காட்டு விலங்குகள் உணவுத்தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது அதிகமாகி வருகிறது. விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் இருக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் அருகே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. சத்திய மங்கலத்தில் இருக்கும் புலிகள் சரணாலயத்தில் இருந்து காட்டு யானைகள் வெளியே வந்து, அடிக்கடி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல், காட்டுப்பகுதிக்குள் செல்பவர்களை தாக்கி மரணமடைய செய்கின்றன.

‘மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை’..3 நாட்களில் 3 பேர் மரணம்.. பீதியில் மக்கள்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரனூர் மலைப்பகுதிக்கு பசுவை தேடிச்சென்ற தொழிலாளி சிக்கண்ணா என்பவர் காட்டு யானைத் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆப்பேரியில் நடந்து சென்று கொண்டிருந்த முனுசாமி என்பவரை ஒற்றை யானை தாக்கி கொன்றுள்ளது. இவ்வாறு காட்டு யானைகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். ஓசூர் அருகே கடந்த 3 நாட்களில் மட்டும் 3 பேர் யானைத் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.