பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது தாக்குதல்: 3 பேர் கைது!

மேல்மலையனூர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசையில் ஊஞ்சல் நடைபெறுவது வழக்கம். கொரோனாவால் கோயில் இக்கோயில் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், இந்த மாதம் தான் திறக்கப்பட்டிருப்பதால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு வர வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, நேற்று அம்மனின் ஊஞ்சல் நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான உள்ளூர் பக்தர்கள் திரண்டனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது தாக்குதல்: 3 பேர் கைது!

கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பை அறியாத வெளிமாவட்ட பக்தர்களும் கோவிலுக்கு திரண்டதால், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதே போல, சோதனை சாவடிகளை அமைத்த போலீசார் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அப்போது, அந்த இடத்துக்கு மதுபோதையில் வந்த 4 பேர் தடுப்பு பணியில் இருந்த போலீசாரை தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், போலீசாரை தாக்கிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கூட்டத்தில் எஸ்கேப் ஆன மற்றொருவரை தேடி வருகின்றனர்.