‘வைரக்கல், ராசிக்கல் விற்கிறோம்’ ஒரே குடும்பத்திடம் ரூ.1.75 கோடி மோசடி: வசமாக சிக்கிய மூவர்!

‘வைரக்கல், ராசிக்கல் விற்கிறோம்’ ஒரே குடும்பத்திடம் ரூ.1.75 கோடி மோசடி: வசமாக சிக்கிய மூவர்!

கள்ளக்குறிச்சியில் ராசிக்கல் விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் சாலையில் வசித்து வருபவர் அருட்செல்வி. இவருக்கு தெரிந்த நபரான செந்தில், அருட்செல்வியின் குடும்பத்துடன் நெருங்கிப்பழகியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு செந்தில் அருட்செல்வியிடம், தான் ஒருவரோடு சேர்ந்து ராசிக்கல் மற்றும் வைரக்கல் வியாபாரம் செய்யப்போவதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதால் நீங்கள் முதலீடு செய்து இருமடங்காக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.

‘வைரக்கல், ராசிக்கல் விற்கிறோம்’ ஒரே குடும்பத்திடம் ரூ.1.75 கோடி மோசடி: வசமாக சிக்கிய மூவர்!

செந்திலின் மனைவியும் ஜாகீர் என்ற நபரும் அருட்செல்வியிடம் உறுதியளித்ததால், அதை நம்பிய அருட்செல்வி அவர்களிடம் ரூ.7 லட்சம் பணம் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு மீண்டும், ரூ.20 லட்சம் முதலீடு செய்தால் தான் முதலில் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும் என செந்திலும், ஜாகீரும் கூறியுள்ளனர். அவர்கள் மோசடி செய்யப்போவதை உணராத அருட்செல்வி, மீண்டும் ரூ.20 லட்சம் பணம் கொடுத்திருக்கிறார். இதே காரணத்தைக் கூறி அருட்செல்வியின் உறவினர்கள் பலரிடம், இந்த இருவரும் பணம் பெற்றுள்ளனர். மொத்தமாக ஒரே குடும்பத்திடம் ரூ.1.75 கோடி மோசடி செய்துள்ளனர். இதற்கு காளிராஜ் என்பவரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

‘வைரக்கல், ராசிக்கல் விற்கிறோம்’ ஒரே குடும்பத்திடம் ரூ.1.75 கோடி மோசடி: வசமாக சிக்கிய மூவர்!

ஒரு கட்டத்தில் மூவரும் பணத்தை திரும்பத் தராததால் மோசடி நடப்பதை உணர்ந்த அருட்செல்வி, அம்மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், பண மோசடி செய்த 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், காளிராஜ் மோசடி செய்த பணத்தில் ரூ.37 லட்சத்துக்கு சொத்து வங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மீதி பணம் குறித்து விசாரணை தொடருகிறது.