பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் நாளை வருகிறது…

 

பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் நாளை வருகிறது…

பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வருகிறது. இதுவரை 11 ரபேல் விமானங்களை டசால்ட் நிறுவனம் வழங்கியது

இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2016ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் மொத்தம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. இதுவரை டசால்ட் நிறுவனம் மொத்தம் 3 கட்டங்களாக மொத்தம் 11 விமானங்களை இந்தியாவுக்கு வழங்கி விட்டது.

பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் நாளை வருகிறது…
பிரதமர் மோடி

இந்நிலையில் தற்போது 4வது கட்டமாக மேலும் 3 ரபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று காலையில் பிரான்ஸிலிருந்து கிளம்பும் ரபேல் விமானங்கள் நாளை இரவு அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமான படைத்தளத்துக்கு இரவு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் நாளை வருகிறது…
ரபேல் போர் விமானம்

எங்கும் தரையிறங்காமல் வரும் இந்த விமானங்களுக்கு தேவையான எரிபொருளை ஐக்கிய அரபு எமிரேட்சின் விமானப்படை விமானம், ஒமன் வளைகுடா பகுதியில் நடுவானில் நிரப்பும் என தகவல். இந்த விமானங்கள் இந்தியாவுக்கு வந்த பின் நம் விமான படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கும். இதுதவிர ஏப்ரல் மாதத்துக்குள் 7 அல்லது 8 விமானங்களை பிரான்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கு டெலிவரி செய்யும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.