சாத்தான்குள இரட்டைக்கொலை விவகாரம்; மேலும் 3 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்!

 

சாத்தான்குள இரட்டைக்கொலை விவகாரம்; மேலும் 3 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குள இரட்டைக்கொலை விவகாரம்; மேலும் 3 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்!

தமிழக அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்தது. சிபிஐ விசாரணையை கையில் எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மேலும் 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டு பேரூரணி சிறையில் இருந்த காவலர்கள் சாமத்துரை, வெயிலுமுத்து, செல்லத்துரை ஆகியோர் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி இவர்கள் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் உடல்நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ பால்துரை, காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.