அனைத்து தியேட்டர்களுக்கும் 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து!

 

அனைத்து  தியேட்டர்களுக்கும்   3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து!

ஆந்திராவில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து  தியேட்டர்களுக்கும்   3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து!

கொரோனா காரணமாக இந்தியா முடிவதும் பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து 6 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. 50 சதவீதம் இருக்கைகளுடன் , கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி தியேட்டர்கள் மீண்டும் திறக்கபட்டன. இருப்பினும் கொரோனாவுக்கு முன்பிருந்தது போல ரசிகர்கள் கூட்டம் வரவில்லை. இதனால் பல தயாரிப்பாளர்கள் ஓடிடியை நாடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயம் தியேட்டர் உரிமையாளர்களும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

அனைத்து  தியேட்டர்களுக்கும்   3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து!

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்துசெய்யப்படுவதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அதேபோல் தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி அளித்துள்ளார். நகரங்கள், புறநகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது என்றும் கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு வட்டி இல்லை என்றும் ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.