திமுக எம்.பி டிஆர் பாலு கோரிக்கை… தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு!

திமுக எம்.பி டிஆர் பாலு கோரிக்கை… தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு!

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தினமும் கூட்டம் அலை மோதுகிறது. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை என்றும் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது.

திமுக எம்.பி டிஆர் பாலு கோரிக்கை… தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு!

கடந்த ஜூன் மாதத்திற்கு தமிழகத்திற்கு 42 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசுக்கு அடுத்தடுத்து கோரிக்கைகள் சென்ற நிலையில் கூடுதலாக 7 லட்சம் தடுப்பூசியை ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து இந்த மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

திமுக எம்.பி டிஆர் பாலு கோரிக்கை… தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு!

இதனிடையே, தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக எம்பி டிஆர் பாலு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் கோரிக்கை விடுத்திருந்தார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகள் கொடுக்கப்படுவதாகவும் தமிழகத்திற்கு குறைவாக தடுப்பூசி ஒதுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். தடுப்பூசிக்காக மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசின் கதவை தட்ட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு 3 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.