துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

 

துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஒரு புறம் மக்களை தாக்கிக் கொண்டிருக்க மறுபுறம் பலர் விபத்திலும் மின்சார தாக்கதலாலும் உயிரிழக்கும் பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர், விபத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 31 குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கும் பாம்பு கடித்து இறந்தவரின் குடும்பத்துக்கும் இரங்கல் தெரிவித்த முதல்வர் அந்த 11 குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.