விஜய் நடித்த மாஸ்டர் படம் சந்திக்க இருக்கும் 3 சிக்கல்கள்! #விஜய் #Vijay

 

விஜய் நடித்த மாஸ்டர் படம் சந்திக்க இருக்கும் 3 சிக்கல்கள்! #விஜய் #Vijay

நடிகர் விஜய் ரசிகர்கள் ஒரு வருஷமாகவே ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார்கள். மாஸ்டர் படம் திட்டமிட்டபடி வெளியாகியிருக்க வேண்டிய நாள் ஏப்ரல் 14, 2020. அதற்காகத்தான் மார்ச் மாதத்தில் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுக்கொண்டே போனது. இறுதியாக, வரும் பொங்கலுக்கு மாஸ்டர் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் மாஸ்டர் சந்திக்க விருக்கும் மூன்று முக்கியச் சிக்கல்கள் பற்றி பார்ப்போம்.

விஜய் நடித்த மாஸ்டர் படம் சந்திக்க இருக்கும் 3 சிக்கல்கள்! #விஜய் #Vijay

ஒன்று: கொரோனா படிப்படியாகக் குறைந்து வந்தாலும், புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அச்சம் நிலவி வருகிறது. ஏற்கெனவே தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என அரசு கட்டளையிட்டுள்ளது. அந்த நிலையில் மாஸ்டர் வெளியானால் சரியான வரவேற்பு கிடைக்காது.

அதை சரிசெய்யவே, முதல்வரை இன்று நடிகர் விஜய் சந்தித்து 100 சதவிகித இருக்கைகள் நிரப்ப அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், அது சாத்தியம் என்று தோன்ற வில்லை. ஏனெனில், ஊரடங்கை நீட்டிக்கலாமா… மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கலாமா என்று பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. இதை எப்படி மாஸ்டர் வெல்லப்போகிறது என்பது புரியாத மர்மம்தான்.

விஜய் நடித்த மாஸ்டர் படம் சந்திக்க இருக்கும் 3 சிக்கல்கள்! #விஜய் #Vijay

இரண்டு: நூறு கோடி வசூல் பட்டியலில் மாஸ்டர் இடம்பிடிப்பது. விஜய் படங்களின் வசூலைப் பற்றி தயாரிப்பாளர்கள் கவலையே பட மாட்டார்கள். சொதப்பலாக ஓடிய பைரவா படமே 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக அறிவிப்புகள் வெளியாகின.

ஏற்கெனவே துப்பாக்கி தொடங்கி விஜயின் பல படங்கள் நூறு கோடி வசூல் பட்டியலில் இருக்கின்றன. இப்போதை கொரோனா சூழல், தியேட்டர்களில் அதிகம் பேரை அனுமதிக்க முடியாத நிலை இவற்றால் நூறு கோடி வசூல் பட்டியலில் மாஸ்டருக்கு இடம் கிடைக்காது என்றே பலரும் கருதுகிறார்கள். அதை எப்படி எதிர்கொள்ளபோகிறது மாஸ்டர் டீம்.

விஜய் நடித்த மாஸ்டர் படம் சந்திக்க இருக்கும் 3 சிக்கல்கள்! #விஜய் #Vijay

மூன்று: லாக்டெளனுக்கு முன்பே சூட்டிங் முடிந்த பல படங்கள், லாக்டெளன் காலத்தில் டப்பிங் உள்ளிட்ட படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகளை முடித்து வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. அப்படியான படங்களை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏனெனில், பொங்கலுக்கு அதிக நாட்கள் விடுமுறை இருக்கும் என்பதால்.

இப்போதைய லிஸ்ட் படி, தனுஷின் ஜகமே மந்திரம், சிம்புவின் ஈஸ்வரன், கார்த்தியின் சுல்தான் ஆகியவை போட்டிப் போடுகின்றன. இவற்றில் சுல்தான் பட வெளியீடு தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. மற்ற படங்கள் வெளியானால், அவற்றிற்கு தியேட்டர் கிடைப்பது, வசூல் உள்ளிட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அதிலும் பெரும் செலவு செய்து எடுக்கப்பட்ட மாஸ்டர் எப்படித் தாக்குப் பிடிக்க போகிறது என்பது சவாலே!

ஆனாலும், அனைத்தும் கடந்து மாஸ்டர் வெல்லும் என்பதே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.