திருச்சியைத் தொடர்ந்து சென்னை – 24 மணி நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

 

திருச்சியைத் தொடர்ந்து சென்னை – 24 மணி நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. மார்ச் மாதம் முதல் இதுவரை குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆன் லைனிலும் நேரிலும் காவல்துறையில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஊரடங்கு நேரத்திலும் உடனுக்குடன் போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். சென்னையில் மட்டும் தினமும் 4க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். அதிலும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பச்சிளம் குழந்தைகள் பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்படுகின்றனர். சென்னையில் 24 மணி நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் தொல்லைக்குள்ளாகியுள்ளனர். சிறுமிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் போக்சோ சட்டமும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாயந்துள்ளது.

வில்லிவாக்கம் சிறுமி

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தன்னுடைய 5 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன்(34) என்பவர் சாந்தியின் வீட்டுக்குள் நளளிரவில் நுழைந்தார். பின்னர் சாந்தியின் அருகில் படுத்திருந்த 5 வயது குழந்தையை அவர் தூக்கிச் சென்றார். மறைவான இடத்தில் வைத்து பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நள்ளிரவில் திடீரென குழந்தையின் அழுகை குரல் கேட்டு சாந்தி கண்விழித்தார். அப்போது தன் அருகில் படுத்திருந்த குழந்தையைக் காணாமல் அவர் பதற்றமடைந்தார். பின்னர் குழந்தையின் அழுகை குரல் கேட்கும் இடத்துக்கு சாந்தி சென்றார். அப்போது குழந்தையை விட்டுவிட்டு சாமிநாதன் ஓட்டம் பிடித்தார். அதைப்பார்த்த சாந்தி, 5 வயது மகளிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது மழலை குரலில் அவள் நடந்த விவரத்தைக் குழந்தை கூறியதும் சாந்தி அதிர்ச்சியில் உறைந்தார்.

திருச்சியைத் தொடர்ந்து சென்னை – 24 மணி நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

இது குறித்து சாந்தி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஷ்வரி தலைமையிலான போலீஸார் சாமிநாதனை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசாரின் தீவிர தேடுதலில் சாமிநாதன் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது மதுபோதையில் தவறு செய்து விட்டதாகவும் மன்னித்து விடும்படியும் கூறினார். ஆனால் சாந்தி, மன்னிக்கவில்லை. து. இதையடுத்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சாமிநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐடிஐ மாணவன்

வில்லிவாக்கத்தில் 5 வயது பெண் குழந்தை என்றால் சென்னை, தரமணி பகுதியில் 9 வயது சிறுமி. அந்தச்சிறுமியுடன் அதே பகுதியை சேர்ந்த 17 வயதாகும் ஐ.டி.ஐ படிக்கும் மாணவன் முதலில் நட்பாக பழகியுள்ளார். பின்னர் சிறுமியை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அதன்பிறகு சிறுமிக்கு மாணவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இந்தத் தொல்லை தொடர்ந்துள்ளது. சிறுமிக்கு உடல்ரீதியாக பாதிப்புகள் ஏற்பட அதை தன்னுடைய அம்மாவிடம் கூறியுள்ளார்.

திருச்சியைத் தொடர்ந்து சென்னை – 24 மணி நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார், மாணவனிடம் விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. சிறுமியும் 17 வயது சிறுவனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்த மாணவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவனைக் கைது செய்த கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

அயனாவரம் சிறுமி

வில்லிவாக்கம், தரமணி சிறுமிகளுக்கு நடந்த கொடுமைகளை விட சென்னை அயனாவரம் சிறுமிக்கு நடந்த கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 15 வயது அயனாவரத்தைச் சேர்ந்த சிறுமியின் அம்மா மன நல பாதிக்கப்பட்டவர். அதனால் பாட்டியில் அரவணைப்பில் அந்தச் சிறுமி இருந்தார். கடந்த மார்ச் மாதத்தில் சிறுமிக்கும் பாட்டிக்கும் பிரச்னை ஏற்பட கோபத்தில் வீட்டை விட்டு வந்துவிட்டாள். சிறுமியை பல இடங்களில் தேடிய பாட்டியும் திரும்ப வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் அவள் மாதக்கணக்கில் வீடு திரும்பவில்லை. இந்தச் சூழலில் கால்போன போக்கில் நடந்த சிறுமி, இறுதியாக பெரம்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தார். பிளாட்பாரத்தில் சுற்றித் திரிந்த சிறுமியை திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞர் பார்த்துள்ளார்.

திருச்சியைத் தொடர்ந்து சென்னை – 24 மணி நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சிறுமியை நீண்ட நேரமாக கவனித்த வெங்கடேசன், அவளிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போதுதான் சிறுமி வீட்டை விட்டு ஓடி வந்த விவரம் வெங்கடேசனுக்கு தெரிந்தது. அதனால் என்னுடன் திருத்தணிக்கு வருகிறாயா, அங்கு உனக்கு வேண்டியதெல்லாம் நான் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறியுள்ளார் வெங்கடேசன். அதை உண்மையென நம்பிய சிறுமியும் ரயில் மூலம் திருத்தணிக்குச் சென்றார். ரயிலில் செல்லும் போது நடந்துக் கொண்ட வெங்கடேசன், வீட்டுக்கு சென்றதும் அவனின் மூளை மிருகமானது. அறைக்குள் சிறுமியை அடைத்துவிட்டு அவளுக்கு தினந்தோறும் பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியுள்ளார். வேறுவழியில்லாமல் சிறுமியும் அந்தத் தொல்லைகளை சமாளித்துவந்துள்ளார். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது.

திருத்தணி ரயில் நிலையம்

இந்தச் சமயத்தில்தான் வெங்கடேசன் வேலைக்காக ஆந்திரா செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது சிறுமியை ஆந்திராவுக்கு அழைத்துச் செல்ல முடியாது. அதே நேரத்தில் வீட்டிலும் தனியாக வைத்திருக்க முடியாது என்பதால் தனக்கு தெரிந்த மேஸ்திரி ஒருவரிடம் சிறுமியை விட்டுவிட்டு சென்றுள்ளார் வெங்கடேசன். மேஸ்திரி வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி, திருத்தணி ரயில் நிலையத்துக்கு ஜூலை 6-ம் தேதி வந்துள்ளார். ஊரடங்கு என்பதால் திருத்தணி ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் சிறுமி மட்டும் ரயில்நிலையத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்துக் கொண்டிருந்தாள். இந்தத் தடவை சிறுமியைக் கவனித்த ரயில்வே போலீசார், அவளிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி, கண்ணீர்மல்க தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறியதோடு அயனாவரத்துக்கு செல்ல வேண்டும் அம்மா, பாட்டியை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திருச்சியைத் தொடர்ந்து சென்னை – 24 மணி நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

போக்குவரத்து வசதியில்லாததால் திருத்தணி ரயில்வே போலீசார், அயனாவரம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சிறுமி குறித்த விவரத்தை தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன், அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து ஜெயந்தி என்ற பெண் காவலரையும் துணைக்கு இன்னொரு காவலரையும் திருத்தணிக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி சென்ற காவலர்கள் சிறுமியை மீட்டு சென்னை அயனாவரத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு சிறுமியிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களை கேட்ட போலீசார், தலைமை செயலக காலனி அனைத்து மகளிர் போலீசாரிடம் சிறுமியை ஒப்படைத்தனர். அதே நேரத்தில் சிறுமியின் பாட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற வெங்கடேசன் அவளிடம் தவறாக நடந்துக் கொண்ட குற்றத்துக்காக போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. வெங்கடேசனை போலீசார் தேடிவருகின்றனர்.

தாம்பரம் சிறுமி

கடந்த 2 நாள்களுக்கு முன், சென்னை கிழக்கு தாம்பரம், காந்தி நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் 5 வயது பெண் குழந்தையை, அதே பகுதியை சேர்ந்த உதயகுமார்(30) கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் சிறுமி நடந்தச் சம்பவத்தைக் தன்னுடைய அம்மாவிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் அம்மா தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து உதயகுமார் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருச்சியைத் தொடர்ந்து சென்னை – 24 மணி நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

புதுக்கோட்டை சிறுமி வழக்கில் பக்கத்துக்கு வீட்டைச் சேர்ந்த பூவியாபாரி கைது செய்யப்பட்டார். சேரமரசன்பேட்டை காவல் நிலைய வழக்கில் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். வையம்பட்டி காவல் நிலைய வழக்கில் 17 வயது கர்ப்பிணி சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் சிறுமியின் உறவினர் ராம்கியை போலீஸார் கைது செய்தனர். திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து சென்னையிலும் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் தொல்லைக்குள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-எஸ். செல்வம்