3 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் : ஓபிஎஸ் – ஈபிஸ் அதிரடி!

 

3 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் : ஓபிஎஸ் – ஈபிஸ் அதிரடி!

சேலம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

3 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் : ஓபிஎஸ் – ஈபிஸ் அதிரடி!

அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்த சசிகலா கடந்த சில வாரங்களாக அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று கூறிவரும் அவர் ஊரடங்கிற்கு பிறகு ஜெயலலிதா சமாதிக்கு சென்று விட்டு தொண்டர்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார். அதேசமயம் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசினால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என இரட்டை தலைமையான ஓபிஎஸ் – ஈபிஎஸ் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டனர். அத்துடன் இந்த அறிவிப்பின் படி பலர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவுடன் பேசிய காரணத்திற்காக மேலு சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்

3 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் : ஓபிஎஸ் – ஈபிஸ் அதிரடி!

சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் மாவட்ட மீனவர் பிரிவு முன்னாள் செயலாளர், நரசிங்கபுரம் நகர கழக மாவட்ட பிரதிநிதி மீனா தியாகராஜன் , நரசிங்கபுரம் நகர 11-ஆவது வார்டு கழக செயலாளர் தியாகராஜன் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ஆனந்த், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணை செயலாளர் வேங்கையன், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணை செயலாளர் ரூபன் k வேலவன், விளாத்திகுளம் பேரூராட்சி புரட்சித்தலைவி பேரவை செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் . கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.