தெற்கு சீனாவில் கனமழையால் வெள்ளம் மற்றும் மண் சரிவு – 3 பேர் உயிரிழப்பு

 

தெற்கு சீனாவில் கனமழையால் வெள்ளம் மற்றும் மண் சரிவு – 3 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: தெற்கு சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெற்கு சீனாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக சீனாவில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து வெளியேறி வருகின்றனர். மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தெற்கு சீனாவில் கனமழையால் வெள்ளம் மற்றும் மண் சரிவு – 3 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு குய்ஷோ மாகாணத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக அதிகமாக பாதித்துள்ளன. கிஜியாங் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பரந்து விரிந்த பெரிய நகரமான சோங்கிங்கில் சுமார் 40,000 மக்கள் உயரமான இடத்தை நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்தாண்டு சீனாவில் பருவகால மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதில் சிலர் காணாமல் போயுள்ளனர்.