கொரோனா வார்டில் 3 பேர் அடுத்தடுத்து மரணம் : மின்தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் தடையா?

கொரோனா வார்டில் 3 பேர் அடுத்தடுத்து மரணம் : மின்தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் தடையா?

கொரோனா வார்டில் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மின்தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கொரோனா வார்டில் 3 பேர் அடுத்தடுத்து மரணம் : மின்தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் தடையா?

இதையடுத்து மரணம் தொடர்பாகக் கோட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த மருத்துவமனைக்கு வந்த நிலையில் இறந்தவர்களின் உறவினர்கள் அவர்களை முற்றுகையிட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குற்றவியல் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறிய நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழங்கும் பணி ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வார்டில் 3 பேர் அடுத்தடுத்து மரணம் : மின்தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் தடையா?

இதனிடையே மின்தடை ஏற்பட்டது உண்மை தான். ஆனால் ஆக்சிஜன் செலுத்த முடியாததால் நோயாளிகள் இறக்கவில்லை. அவர்கள் வேறு உடல்நல குறைபாட்டால் இறந்துள்ளார்கள் என மருத்துவமனை டீன் வள்ளி விளக்கமளித்துள்ளார்.