விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

 

விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்து வந்த 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

விழுப்புரம் மாவட்ட கிராமப்புற பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதனை அடுத்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ராதாகிருஷ்ணன், குற்றவாளிகளை பிடிக்க ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீசார், திருவெண்ணெய்நல்லூரில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், விழுப்புரத்தை சேர்ந்த கோபி மற்றும் அவரது சகோதரர் சடகோபன் ஆகியோர் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நிறுவனத்தை தொடங்கி, முகவர்கள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் உள்ள முகவர்களுக்கு இமெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக லாட்டரி சீட்டுகளின் எண்களை அனுப்பி, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, கோபியின் சகோதரர் சடகோபன் மற்றும் முகவர்களாக செயல்பட்ட விழுப்புரம் எம்.ஆர்.கே. தெருவை சேர்ந்த வெங்கடேசன், சேவியர் காலனியை சேர்ந்த யோவான் ஆகியோரை கைதுசெய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், மடிக்கணினிகள், பிரிண்டிங் மெஷின் உள்ளிவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கோபி தலைமறைவான நிலையில், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.