அந்த 4 சாதிக்கு மட்டும் 8… ராமதாஸ் விரக்தி

 

அந்த 4 சாதிக்கு மட்டும் 8… ராமதாஸ் விரக்தி

உயிர்த்தியாகம் செய்து இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த வன்னியர் சமுதாயத்துக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் 3.5%. எதுவுமே செய்யாத 4 சாதிகளுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் 8. இந்தக் கொடுமையைப் பாருங்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே! என்று பாமக தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அந்த 4 சாதிக்கு மட்டும் 8… ராமதாஸ் விரக்தி

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கடந்த 40 வருடங்களாக போராடி வருகிறேன் என்று சொல்லும் ராமதாஸ், கடந்த டிசம்பர் 1ம் தேதியில் இருந்து மீண்டும் தீவிர போராட்டத்தினை முன்னெடுத்தார். 20 சதவிகித இட ஒதுக்கீடுகோரி தமிழகம் முழுவதும் இதுவரைக்கும் ஐந்துகட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறது பாமக. இன்றைக்கு ஆறாம் கட்ட போராட்டத்தினை பாமக தமிழகம் முழுவதும் நடத்தியிருக்கிறது.

அந்த 4 சாதிக்கு மட்டும் 8… ராமதாஸ் விரக்தி

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்றார். பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் வன்னிய இட ஒதுக்கிடு தொடர்பாக மனுஅளிக்கப்பட்டது.

அந்த 4 சாதிக்கு மட்டும் 8… ராமதாஸ் விரக்தி

இந்நிலையில் போராட்டம் குறித்து, உயிர்த்தியாகம் செய்து இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த வன்னியர் சமுதாயத்துக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் 3.5%. எதுவுமே செய்யாத 4 சாதிகளுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் 8. இந்தக் கொடுமையைப் பாருங்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே! என்று தனது கருத்தினை பதிவிட்டிருக்கிறார்.