3.65 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வருகை!!

 

3.65 லட்சம் கோவிஷீல்டு கொரோனா  தடுப்பூசிகள் இன்று சென்னை வருகை!!

தமிழகத்துக்காக இன்று 3.65 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வருகின்றன.

3.65 லட்சம் கோவிஷீல்டு கொரோனா  தடுப்பூசிகள் இன்று சென்னை வருகை!!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நிலவரப்படி 12,520 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு என 10 ஆயிரத்து 930 தடுப்பூசிகளும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 1,590 தடுப்பூசிகளும் இருந்தன. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி போட முகாமுக்கு செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் சூழல் ஏற்பட்டது.

3.65 லட்சம் கோவிஷீல்டு கொரோனா  தடுப்பூசிகள் இன்று சென்னை வருகை!!

இந்நிலையில் தமிழகத்துக்காக இன்று 3.65 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு வர மேலும் 2 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 3.65 லட்சம் தடுப்பூசி சென்னைக்கு வருகிறது. அத்துடன் மதுரையில் கடந்த 3 நாட்களாக தடைபட்டு இருந்த தடுப்பூசி முகாம் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.முன்னதாக தடுப்பூசி கையிருப்பு குறித்து மாநில பொதுமக்களுக்கு தெரிவிக்க கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்துள்ளது.