காட்டுத்தீயாய் பரவும் கொரோனா; 3.52 லட்சம் பேர் பாதிப்பு… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

காட்டுத்தீயாய் பரவும் கொரோனா; 3.52 லட்சம் பேர் பாதிப்பு… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காட்டுத்தீயாய் பரவி வருகிறது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அம்மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருவதோடு, ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்ட மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் விநியோகம் செய்ய அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காட்டுத்தீயாய் பரவும் கொரோனா; 3.52 லட்சம் பேர் பாதிப்பு… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒரே நாளில் 3,52,991 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,73,13,163 ஆக அதிகரித்துள்ளதாகவும் 2,812 பேர் உயிரிழந்திருப்பதால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,95,123 ஆக அதிகரித்துள்ளதாகவும் 28,13,658 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்டுத்தீயாய் பரவும் கொரோனா; 3.52 லட்சம் பேர் பாதிப்பு… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ள சூழலில் இரண்டாம் அலை பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத்துறை போராடிக் கொண்டிருக்கிறது. அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, பழைய நிலையை மீட்டுக் கொண்டு வர மாநில அரசுகளுடன் துணை நிற்போம் என உறுதியளித்துள்ளது. இந்த நிலை மாறி, இந்தியா இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.