எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு.. நாளுக்கு நாள் புதிய உச்சம் : பீதியில் மக்கள்!

 

எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு.. நாளுக்கு நாள் புதிய உச்சம் : பீதியில் மக்கள்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு.. நாளுக்கு நாள் புதிய உச்சம் : பீதியில் மக்கள்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,46,786 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 2,624 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,89,544 ஆக அதிகரித்துள்ளது. 2,19,838 பேர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டதால் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 1,38,67,997 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 25,52,940 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா இரண்டாம் அலை பரவலின் ஆரம்பக்கட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கிவிட்டது. அதே போல, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிர