3.26 லட்சமாக குறைந்த கொரோனா பாதிப்பு… இயல்பு நிலைக்கு திரும்புமா இந்தியா?

 

3.26 லட்சமாக குறைந்த கொரோனா பாதிப்பு… இயல்பு நிலைக்கு திரும்புமா இந்தியா?

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும், கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இடமில்லாமல் நோயாளிகள் வாசல்களிலும், ஆம்புலன்ஸ்களிலும் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய இடமில்லாமல் மாயனங்களில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

3.26 லட்சமாக குறைந்த கொரோனா பாதிப்பு… இயல்பு நிலைக்கு திரும்புமா இந்தியா?

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரு நாள் கொரோனா பலி எண்ணிக்கை – 3,890, குணமடைந்தோர் எண்ணிக்கை – 3,53,299, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை – 36,73,802 ஆக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

3.26 லட்சமாக குறைந்த கொரோனா பாதிப்பு… இயல்பு நிலைக்கு திரும்புமா இந்தியா?

மேலும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 2,04,32,898, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை – 2,04,32,898, உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை – 2,66,207 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் பாதிப்பு 4 லட்சத்தை எட்டியிருந்த நிலையில், தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3.26 லட்சமாக குறைந்துள்ளது. அதே போல, குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படியே பாதிப்பு குறைந்து, இந்தியா இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.