இந்தியாவில் இதுவரை 3.26 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை : ஐசிஎம்ஆர் தகவல்!

 

இந்தியாவில் இதுவரை 3.26 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை : ஐசிஎம்ஆர் தகவல்!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இங்கெல்லாம் கொரோனா பரவாது, அப்படியே பரவினாலும் சீனா அளவுக்கு இருக்காது என பல்வேறு கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில், கொரோனா பரவிய ஒரு சில மாதங்களிலேயே சீனாவின் பாதிப்பை விட பன்மடங்கு அதிகமானது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாகியும் இந்த கொரோனா பாதிப்பு இன்னும் முடிந்த பாடில்லை. இதனைத் தடுக்க முழுபொதுமுடக்கம், கொரோனா பரிசோதனை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், கொரோனா பாதிப்பு குறையவில்லை. ஆனால் இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவாக இருக்கிறது.

இந்தியாவில் இதுவரை 3.26 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை : ஐசிஎம்ஆர் தகவல்!

இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் வகையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் மருந்து, மனிதர்களுக்கு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அந்த பரிசோதனைகள், நல்ல முடிவையே கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா மரணம் குறைவாக இருப்பதற்கு முக்கியமான காரணம், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தது தான். இதன் மூலமாக, ஆரம்ப கட்டத்திலேயே பாதிப்பு கண்டறியப்பட்டு உரிய சிகிச்சையுடன் குணமாக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை 3.26 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 9.18 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.