3 மீட்டர் உயர சைக்கிளை அசால்டாக ஓட்டும் சிறுவன்… வைரலான வீடியோ!

3 மீட்டர் உயர சைக்கிளை அசால்டாக ஓட்டும் சிறுவன்… வைரலான வீடியோ!

நாம் எல்லாம் அரைபெடல் அடித்து சைக்கிள் ஓட்ட பழகினோம். நம் ஊரில் உள்ள சாதாரண சைஸ் சைக்கிளிலேயே பலரும் கால் தரையை தொடுவது இல்லை. மலேசியாவில் ஒரு சிறுவன் மூன்று மீட்டர் உயரத்தில் அமர்ந்துகொண்டு சர்வசாதாரணமாக சைக்கிள் ஓட்டி வருகிறான். அது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

cycle

55 விநாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், 3 மீட்டர் சைக்கிள் பிரம்மாண்டமாக இருக்கிறது. அதில், சர்வசாதாரணமாக அந்த சிறுவன் சைக்கிள் ஓட்டுகிறான். படிக்கட்டு ஏறுவது போல மேலே ஏறுவதும், இறங்குவதும் நமக்கு பயமாக உள்ளது. கடைசியில் சிறுவர்கள் சிலர் தங்கள் சைக்கிளோடு இந்த பிரம்மாண்ட சைக்கிளை பார்ப்பது போல முடித்துள்ளனர். இதை கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலரும் இந்த பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிறுவன் சைக்கிளில் பயணம் செய்வதைப் பார்க்கும்போது எனக்கு பயம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். சைக்கிளில் செல்லும்போது என்ன செய்வது என்று தெரியவில்லை என்றால் பேசாமல் அருகில் உள்ள மரத்தில் அமர்ந்துவிடலாம் என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 

மற்றொருவர் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு புதிய ஆராய்ச்சியே செய்துவிட்டார் போல. தன்னுடைய கமெண்டில், “உலகத்திலேயே மிக உயரமான சைக்கிளை ஓட்டுகிறேன் என்று நீங்கள் கருத வேண்டாம். மிக உயரமான சைக்கிள் என்பது 6.14 மீட்டர் உயரம் கொண்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஜ்சல்ஸில் 2013ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஒருவர் அந்த சைக்கிளை ஓட்டி சாதனை படைத்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்னதான் இருக்கட்டுமே, இந்த உயரமான சைக்கிள் பயணத்தைப் பார்த்த பலரும் இதை ரீட்வீட் செய்வதுடன், கமெண்டில் பாராட்டையும் தெரிவித்து வருவதைக் காண முடிகிறது.