3 மாதத்தில் லாபமாக ரூ.4,466 கோடி அள்ளிய இன்போசிஸ்…..

 

3 மாதத்தில் லாபமாக ரூ.4,466 கோடி அள்ளிய இன்போசிஸ்…..

இன்போசிஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,466 கோடி ஈட்டியுள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒரு முறை தங்களது நிதிநிலை முடிவுகளை வெளியிடுகின்றன. அதன்படி, கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வரிசையாக வெளியிட தொடங்கி விட்டன. நாட்டின் இரண்டாவது பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் நேற்று தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

இன்போசிஸ்

இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) இன்போசிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,466 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் (2018 அக்டோபர்-டிசம்பர்) காட்டிலும் 23.7 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்துக்கு ரூ.3,610 கோடி மட்டுமே லாபமாக கிடைத்து இருந்தது.

இன்போசிஸ்

2019 டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் 7.9 சதவீதம் அதிகரித்து ரூ.23,092 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 டிசம்பர் இறுதி நிலவரப்படி, இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2.34 லட்சமாக உள்ளது.