3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்: தவறினால் நடவடிக்கை!

 

3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்: தவறினால் நடவடிக்கை!

3 மாதங்களுக்குள் வீடு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள்,வணிக வளாகங்கள்  என அனைத்திலும் மழைநீர் சேமிப்பை நிறுவ வேண்டும்.

3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்: தவறினால் நடவடிக்கை!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பை  நிறுவ வேண்டும் என அமைச்சர் வேலுமணி  உத்தரவிட்டுள்ளார்.

வரலாறு காணாத  அளவிற்கு இம்முறை தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னையில் இன்னும் கூட பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் என்பது தொடர்கதையாகவே உள்ளது. பெரும்பாலான  பகுதிகளில்  தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர். சென்னை குடிநீர் வாரியம் லாரிகளில் அனுப்பும் நீரை நம்பியே மக்கள் தங்கள் அன்றாட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

அதே சமயம் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், மழைநீர் சேகரிப்பு என்பது அவசியமானதாக மாறியுள்ளது. இதை பலரும் உணர்ந்து மழைநீரைச் சேமிக்கும் பணியை முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாகச் சென்னையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வேலுமணி, ‘வடகிழக்கு பருவமழையின்போதே  மழைநீரை  சேமிப்பது என்பது அவசியமாகும். அதனால் 3 மாதங்களுக்குள் வீடு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள்,வணிக வளாகங்கள்  என அனைத்திலும் மழைநீர் சேமிப்பை நிறுவ வேண்டும். அப்படி மழைநீர் சேமிப்பை அமைக்காவிடில் தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என்றார். 

 

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஒவ்வொரு குடிமகனும் செயல்படுத்தி வளமான பூமியாகத் தமிழ்நாடு தொடர்ந்திட ஆதரவு அளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.