3 மாடல்களை சந்தையில் இறக்கும் நோக்கியா!

 

3 மாடல்களை சந்தையில் இறக்கும் நோக்கியா!

என்னதான் பல வித்தியாசமான போன்கள் வந்தாலும் நோக்கியா மாதிரி வராது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே எத்தனையோ ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் நோக்கியவிற்கான மவுசு இன்றும் குறையவில்லை. முதன்முதலில் மொபைல் சந்தையில் களமிறங்கி செல்போன்கள் பற்றிய முன்னுரையை கொடுத்த நோக்கியா நாளை 3 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. 

nokia

என்னதான் பல வித்தியாசமான போன்கள் வந்தாலும் நோக்கியா மாதிரி வராது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே எத்தனையோ ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் நோக்கியவிற்கான மவுசு இன்றும் குறையவில்லை. முதன்முதலில் மொபைல் சந்தையில் களமிறங்கி செல்போன்கள் பற்றிய முன்னுரையை கொடுத்த நோக்கியா நாளை 3 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. 

தினமும் குறைந்தது 10 மாடல் மொபைல்களாவது அறிமுகமாவது தொடர்கதையாகவுள்ள நிலையில் நோக்கியாவின் இந்த இரண்டு மாடல் மொபைகளில் என்ன அம்சங்கள் இருக்கின்றன என அனைவரும் கேட்கலாம். நாளை வெளிவரவுள்ள நோக்கியா 4.2 , நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 9 ப்யூர்வியூ ஆகிய 3 மாடல்களில் நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் பென்டா கேமரா எனப்படும் 5 கேமராக்களை கொண்டதாகும். 

nokia 4.2

நோக்கியா 4.2

5.71 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை ஆகிய சமீபத்திய தொழில்நுட்பத்துடன் இந்த மொபைல் உருவாக்கப்பட்டுள்ளது. 

3 ஜி.பி. ரேம் மற்றும்  32 ஜி.பி எக்ஸ்டர்னல் மெமரி அம்சங்களுடன் வெளிவரவுள்ளது. 

13 எம்.பி‌ 2 எம்.பி பின்புற கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் நோக்கியா 4.2 உருவாக்கப்பட்டுள்ளது. 

– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வைபை, வோல்ட் இ போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் இதில் உள்ளன. மேற்கண்ட அனைத்து தொழில்நுட்பங்களுடனேயே நோக்கிய 3.2 வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

nokia 9 pureview

நோக்கியா 9 ப்யூர்வியூ

5.99 அங்குல நவீன‌தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட டிஸ்ப்ளே, கைரேகை சென்சார் அம்சங்களுடன் நோக்கியா 9 ப்யூர்வியூ உருவாக்கப்பட்டுள்ளது

இதுமட்டுமின்றி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி எக்ஸ்டர்னல் மெமரி வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
5 லென்ஸ் கேமராக்களில் 12 மெகாபிக்சல் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் மூன்று மோனோகரோமேட்டிக் லென்ஸ் மற்றும் இரண்டு ஆர்ஜிபி லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 20 எம்பி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. எனவே வீடியோ காலிங்கின் தரம் மேம்பட்டதாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.