3 மாசத்துக்கு வெங்காயம் விலை குறையாது! ஏற்றுமதிக்கான தடை தொடர்கிறது!

 

3 மாசத்துக்கு வெங்காயம் விலை குறையாது! ஏற்றுமதிக்கான தடை தொடர்கிறது!

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடந்த நில வாரங்களாக திடீரென விலை ஏற்றமடைந்தது. இதையடுத்து சில இடங்களில் கிலோ நூறு ரூபாய்களையும் தாண்டியது. வெங்காயத்தின் விலையேற்றத்தைத் தொடர்ந்து மத்திய அரசு, வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த செப்டம்பர் மாதம் முதலே தடை விதித்து வருகிறது. பருவ மழையின் தாக்கல், போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மக்களின் தேவைக்கேற்ப வெங்காயத்தை சப்ளை செய்ய இயலவில்லை.

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடந்த நில வாரங்களாக திடீரென விலை ஏற்றமடைந்தது. இதையடுத்து சில இடங்களில் கிலோ நூறு ரூபாய்களையும் தாண்டியது. வெங்காயத்தின் விலையேற்றத்தைத் தொடர்ந்து மத்திய அரசு, வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த செப்டம்பர் மாதம் முதலே தடை விதித்து வருகிறது. பருவ மழையின் தாக்கல், போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மக்களின் தேவைக்கேற்ப வெங்காயத்தை சப்ளை செய்ய இயலவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்யும் முயற்சியில் இறங்கியது. ஆனாலும் வெங்காயத்தின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நூறு ரூபாயில் இருந்து 60 முதல் 70 ரூபாய்கள் வரையில் சந்தையில் தற்போது வெங்காயம் விற்பனையாகி வருகிறது.

onion

இந்நிலையில், வெங்காயத்தின் சப்ளை உயரும்… அதனால் இனி வரும் காலங்களில் வெங்காயத்தை விலை குறையத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதம் வரையில் வெங்காயத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில், பலரும் சபரிமலைக்குச் செல்வதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலை அடுத்து மார்கழி, தை மாதமும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்கள் வெங்காயத்தின் விலையை தொடர்ந்து உயரத்திலேயே வைத்திருக்கின்றன. இதையடுத்து பிப்ரவரி மாதம் வரையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு  தடைவிதித்துள்ளது!