3 மாசத்துக்கு வாடகைக்கு கேட்க கூடாது….. குடியிருப்பவர்களை வெளியேற்றவும் கூடாது… வீட்டு உரிமையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தல்….

 

3 மாசத்துக்கு வாடகைக்கு கேட்க கூடாது….. குடியிருப்பவர்களை வெளியேற்றவும் கூடாது… வீட்டு உரிமையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தல்….

3 மாதத்துக்கு வாடகை கேட்கக்கூடாது என்றும், வாடகை தரவில்லை என்பதற்காக குடியிருப்பவர்களை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் தொற்றுநோயான கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்குகின்றனர். பெட்டிக்கடை முதல் பெரிய நிறுவனங்கள் (மருந்து, பலசரக்கு கடைகள் தவிர்த்து) வரை மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல கோடி தொழிலாளர்கள் வேலையில்லாமல் வருவாய் ஆதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

வீடு

லாக்டவுனால் எந்தவொரு வேலைவாய்ப்பும் மற்றும் வருவாயும் இல்லாததால் அன்றாட வாழ்க்கையை நடத்தவே பலர் சிரமப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் சில வீட்டு உரிமையாளர்கள் வாடகை தரவில்லை என்பதற்காக வாடகைக்கு குடியிருப்பவர்களை வெளியேற்றுவதாகவும், காலி செய்யுமாறும் வற்புறுத்தவதாகவும் புகார்கள் வந்தது. இதனையடுத்து,  3 மாதத்துக்கு வாடகை  கேட்கக்கூடாது என்றும், வாடகை தரவில்லை என்பதற்காக குடியிருப்பவர்களை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

வீட்டுவசதி துறை செயலர் சஞ்சய் குமார்

இது தொடர்பாக மகாராஷ்டிரா வீட்டுவசதி துறை செயலர் சஞ்சய் குமார் வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில், கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிப்பதை 3 மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் வாடகை தரவில்லை என்பதற்காக குடியிருப்பவர்களை வெளியேற்றக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கையால் வாடகை வீட்டில் குடியிருக்கும் சுமார் 10 லட்சம் குடும்பங்கள் பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.