3 நாட்களில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு… கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் அதிகரிப்பு…

 

3 நாட்களில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு… கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் அதிகரிப்பு…

நம் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் கடைசி 10 ஆயிரம் பேர் கடந்த 3 நாட்களில் கண்டு பிடிக்கப்பட்டவர்கள். இதன் மூலம் கொரோனா வைரஸ் எவ்வளவு தீவிரமாக பரவி வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஜனவரி மாதத்தில் கேரளாவில் நம் நாட்டின் முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல பரவி தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டி விட்டது.

கொரோனா வைரஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தொட சுமார் 4 மாதங்கள் ஆனது. ஆனால் கடந்த 3 நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் விகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 26 ஆயிரமாக இருந்தது.

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

ஆனால் கடந்த 10 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறுகையில், நாட்டின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் விகிதம் சுமார் 12 நாட்களாக உள்ளதாக தெரிவித்தார். ஆனால் தற்போது இரட்டிப்பாகும் விகிதம் அதனை காட்டிலும் அதிகரித்துள்ளது.