3 நாட்களாக ஒரு டிக்கெட் கூட விற்கவில்லை.. குன்னூர் சிறப்பு மலை ரயில் ரத்து !

 

3 நாட்களாக ஒரு டிக்கெட் கூட விற்கவில்லை.. குன்னூர் சிறப்பு மலை ரயில் ரத்து !

பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு 13 நாட்களுக்கு உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை 132 இருக்கைகளைக் கொண்ட சிறப்பு மலை ரயில்கள் இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

பருவமழையின் தாக்கத்தின் காரணமாக மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயங்கும் மலை ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ரயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டும், பாறைகள் உருண்டு விழுந்தும் ரயில்களை இயக்க முடியாத சூழ்நிலை நிலவியது. தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக மலை ரயில் மீண்டும் இயக்கப்படுகின்றன.

ttn

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு 13 நாட்களுக்கு உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை 132 இருக்கைகளைக் கொண்ட சிறப்பு மலை ரயில்கள் இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில்கள் ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும், ஜனவரி 5 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் என்றும்  குன்னூர் – ரண்ணிமேடு வரையிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ttn

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக  குன்னூர் முதல் ரண்ணிமேடு வரை செல்ல ஒரு டிக்கெட் கூட விற்பனை ஆகாததால் ரயில்வே ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை காலி செய்து, தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.  குன்னூர் – ரண்ணிமேடு 7 கிலோ மீட்டர் தூரமே இருக்கின்ற போதிலும், அதற்காக  ரூ.475 மற்றும் ரூ.320 கட்டணமாக வசூலிப்பது அதிகம் என்று சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.