3 சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் தொழில்… அட்டூழியம் செய்த 9 போலீஸார் எஸ்கேப்..!

 

3 சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் தொழில்… அட்டூழியம் செய்த 9 போலீஸார் எஸ்கேப்..!

போதிய ஆதாரங்கள் இல்லையெனக்கூறி விடுதலை செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரத்தில் தகவல் கசிந்து வருகிறது. புகார் வந்தவுடன் போலீஸ் மீதான இந்த புகாரை விசாரித்து, அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

புதுச்சேரி நகரில் 3 சிறுமிகளை அடைத்து வைத்து ஒரு கும்பல் பாலியல் தொழில் நடத்திவந்ததாக கடத் 2014ம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்கும்போது போலீஸ் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே இந்தவழக்கு உடனடியாக சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. விசாரணையில் சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்வதற்கு போலீசாரே உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முதல் ஏட்டு வரை சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. women

இந்தவழக்கு விசாரணை சூடுபிடித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் சுந்தர், யுவராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் அனுஷா பாஷா, பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், போலீஸ் ஏட்டுகள் குமாரவேலு, பண்டரிநாதன், போலீஸ்காரர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகிய 9 பேரும் மற்றும் புரோக்கர்கள் புஷ்பா, ரகுமான், அருள்மாரி உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.women

இவர்களில் 8 போலீசாரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கை புதுச்சேரி முதலாவது அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தநிலையில் கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. அதில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரின் மீதும் போதிய ஆதாரங்கள் கிடையாது. எனவே அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. 

ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சக போலீஸ் மீதான பாசத்தால், சிபிசிஐடி போலீசார் போதிய ஆதாரங்கள், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தவறிவிட்டதால், போதிய ஆதாரங்கள் இல்லையெனக்கூறி விடுதலை செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரத்தில் தகவல்  கசிந்து வருகிறது. புகார் வந்தவுடன் போலீஸ் மீதான இந்த புகாரை விசாரித்து, அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அப்படியிருக்கும் போது போலீஸ்காரர்கள் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்திருப்பது பெரும் விவாதப் பொருளாகிவிட்டது. இந்த தகவல் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரையும் சென்றடைய அவர்கள் பேரதிர்ச்சியாகி உள்ளனர்.