3 கோடி செஞ்சது பத்தல… தமிழ் புத்தாண்டு அன்று புது அறிவிப்பை வெளியிட போகிறேன்- லாரன்ஸ் அதிரடி!

 

3 கோடி செஞ்சது பத்தல… தமிழ் புத்தாண்டு அன்று புது அறிவிப்பை வெளியிட போகிறேன்- லாரன்ஸ் அதிரடி!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் காரணமாக  பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குநர்கள் வேளை சோற்றுக்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு தங்களாலான உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் 50 லட்சம் ரூபாய் உதவி தொகையை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களுக்கு வழங்கியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு 25 லட்சமும், தினக்கூலி மற்றும் தான் பிறந்த ராயப்புரம் பகுதி ஏழை மக்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் பிரதமர் நிவாரணத்தொகைக்கு ரூ. 50லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ,50 லட்சமும் வழங்கியுள்ளார். மொத்தமாக 3 கோடி ரூபாய் வரை நிவாரணம் வழங்கினார். 

லாரன்ஸ்

இந்நிலையில் இன்று காலை லாரன்ஸ் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், “நிவாரண நிதிக்கு நான் அளித்த பங்களிப்பிற்கு எனக்கு வாழ்த்துகளைக் கூறிய நண்பர்கள், ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மிகப் பெரும் நன்றி. உங்கள் அனைவரின் அன்பும் என்னை மூழ்கடித்துவிட்டது. இந்த நன்கொடைக்குப் பிறகு ஸ்டன்ட் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் பலர் இன்னும் உதவிகள் செய்யுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். பொதுமக்களிடம் இருந்தும் எனக்குக் கடிதங்கள், வீடியோக்கள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் பார்க்கும்போது எனக்கு இதயமே நொறுங்கிவிடுவது போல் இருந்தது.அவை அனைத்திற்கும் நான் தந்த 3 கோடி ரூபாய் போதாது. எனவே, நியாயமாக என்னுடைய உதவியாளர்களிடம், என்னால் இதற்கு மேல் தர இயலாது எனவே நான் பிஸியாக இருப்பதாகச் சொல்லிவிடுங்கள் என்றேன். என்னுடைய அறைக்குச் சென்று இது பற்றி யோசித்துப் பார்த்தேன். நான் செய்தது பற்றி உண்மையில் வருத்தப்பட்டேன். நேற்று இரவு என்னால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை. அதைப் பற்றி ஆழமாக யோசித்தபோது, இந்த உலகத்திற்குள் வரும் போது நாம் எதையும் கொண்டு வரவில்லை, போகும் போதும் எதுவும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. அனைத்து கோயில்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பசியில் கடவுள் இருக்கிறார் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில், கடவுளிடம் கொடுக்கும் போது அது மக்களுக்குப் போய்ச் சேராது. ஆனால், மக்களுக்குக் கொடுக்கும் போது அது கடவுளிடம் போய்ச் சேரும். ஏனென்றால் கடவுள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.கடவுள் என்னை வீட்டில் உட்கார வைத்திருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் என்னை சேவை செய்வதற்கான வேலையைக் கொடுத்திருக்கிறார். இது அனைவருக்கும் ஒரு கடினமான காலகட்டம். எனவே, சேவை செய்வதற்கு இதுதான் சரியான தருணம். எனவே, மக்களுக்கும், அரசுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளேன். இப்போது நான் கொடுத்த 3 கோடி இல்லாமல் மேலும் எனது ஆடிட்டர் மற்றும் என் நலம்விரும்பிகளுடனும்,  உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் நான் என்ன செய்யப் போகிறேன் என்று கலந்து பேச உள்ளேன். அது என்னவென்று இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறேன்” என அறிவித்திருந்தார்.

FB post

இந்நிலையில் தற்போது அந்த புதுஅறிவிப்பை தமிழ் புத்தாண்டு அன்று அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய ஆடிட்டரிடம் விவாதித்ததாகவும்,அவர் இரண்டு நாட்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்ததாகவும் லாரன்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.