3 குழந்தைகளை கொன்று விட்டு நியூசிலாந்து முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் தற்கொலை

 

3 குழந்தைகளை கொன்று விட்டு நியூசிலாந்து முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் தற்கொலை

நியூசிலாந்தின் முன்னாள் ரக்பி வீரர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் தனது 3 குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கான்பெர்ரா: நியூசிலாந்தின் முன்னாள் ரக்பி வீரர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் தனது 3 குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் (வயது 42) சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜிம் பயிற்சியாளரான ஹன்னா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரோவான்-ஹன்னா தம்பதி பிரிந்தனர்.

இந்நிலையில், தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிரிஸ்பேனில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஹன்னா காரில் புறப்பட்டார். கார் சென்று கொண்டிருந்தபோது பாதி வழியில் அவரது காரை ரோவான் வழிமறித்தார். ஹன்னாவுடன் பேச வேண்டும் என்று கூறி காரில் ரோவான் ஏறிக் கொண்டார். இதைத் தொடர்ந்து காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தனது பெற்றோர் வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவுக்கு முன்னால் காரை நிறுத்திய ஹன்னா, ரோவானை காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார்.

ttn

ஆனால் அதை மறுத்த ரோவான், தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை ஹன்னா மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றினார். மேலும் சட்டென்று ஹன்னா உடலிலும், குழந்தைகள் உடலிலும் தீயைக் கொளுத்திய ரோவான் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கார் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரில் இருந்தவர்களை காப்பாற்ற அந்த இளைஞர் முயற்சித்தார். ஆனால் ஹன்னாவை மட்டுமே அந்த இளைஞரால் காப்பற்ற முடிந்தது. ரோவானும், அவரது 3 குழந்தைகளும் காருக்குள்ளேயே உடல் கருகி பலியாகினர். உயிர்தப்பிய ஹன்னாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.