“3 கிலோ சிக்கன் ரூ.99 மட்டுமே…சிக்கன் வறுவலும் இலவசம்” : கொரோனா பீதியை போக்க வியாபாரிகள் புதுமுயற்சி!

 

“3 கிலோ சிக்கன் ரூ.99 மட்டுமே…சிக்கன் வறுவலும் இலவசம்” : கொரோனா பீதியை போக்க வியாபாரிகள் புதுமுயற்சி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

ttn

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 38 பேருக்கும், கேரளாவில் 24 பேருக்கும், ஹரியானாவில் 14 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று  உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 14 பேரும், கர்நாடகாவில் 7 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், டெல்லியில் 6 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சமீபத்தில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த  நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில் அவர் குணமாகியுள்ளார். இருப்பினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இப்படியாக கொரோனா வைரஸ் பீதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. 

ttn

இந்நிலையில் சமீபமாக கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவுவதாக சமூகவலைதளங்களில் பரவியதை தொடர்ந்து கோழிக்கறி மற்றும் முட்டையின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

tn

 இதை சரிசெய்யும் நோக்கில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில்,  3 கிலோ கோழிக்கறியை 99 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரிகள், மக்களுக்கு சிக்கன் வறுவலை இலவசமாக வழங்கினர். கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வராது என்பதை உணர்த்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.