3 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் அதிரடி!

 

3 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் அதிரடி!

அதிமுக-வுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள்

புதுதில்லி: அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 3 பேருக்கு எதிராக சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக-வுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள் எனவே 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார். 

dhanapal

இரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் வெளிப்படையாகவே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக பேசியும், செயல்பட்டும் வருவதாகவும், தினகரன் அணியில் அவர்கள் பொறுப்பில், பதவியில் இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவர்களிடம் 7 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக சார்பில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்தார்.

three mlas

அதேசமயம், எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தரப்பில் சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீசில் 7 நாட்களுக்குள் விளக்கம் கோரி உள்ளார். எங்கள் பதிலுக்குக்கூட காத்து இருக்காமல் அவர் எங்களை தகுதி நீக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளது. திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. அது நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது.

கட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்டட அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களை இதுவரை தகுதிநீக்கம் செய்யவில்லை. தன்னுடைய பாரபட்சமான நோக்கினால் எங்கள் மீது மட்டும் இது போன்ற நடவடிக்கையை அவசரமாக எடுக்கிறார். சபாநாயகர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என கூறப்படிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொன்ட உச்ச நீதிமன்றம், எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இது தொடர்பாக சபாநாயகர் மற்றும் தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.