3 உலகக் கோப்பை போட்டிகளின் கேப்டனுக்கு கிரிக்கெட் சங்க தலைவர் பதவி வழங்கி கவுரவும் !

3 உலகக் கோப்பை போட்டிகளின் கேப்டனுக்கு கிரிக்கெட் சங்க தலைவர் பதவி வழங்கி கவுரவும் !

ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முகமது அசாரூதீன் 147 ஓட்டுகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் தோல்வி அடைந்தார்.

mohammed azhrauthin

ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்து வந்த அர்ஷத் அயூப் ராஜினாமா செய்ததை அடுத்து தேர்தல் நடத்தப்பட்டு முகமது அசாருதீனுக்க அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. லோதா கமிட்டி பரிந்துரைகள் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பதவி விலக நேரிட்டுள்ளது. 
‘ஐதராபாத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ரஞ்சி கோப்பை போட்டியில் கடைசி அணிக்கு முந்தைய இடத்தை மட்டுமே பிடிக்க முடிகிறது. இந்த நிலையை மாற்ற விரும்புவதாகவும் மாவட்ட அளவில் கிரிக்கெட்டின் தரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவேன் என்றும் முகமது அசாருதின் தெரிவித்து உள்ளார்.
1992, 1996, 1999 ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமைக்குரிய அசார், 2000ல் வெடித்த மேட்ச் பிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஆயுள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் நீதிமன்றத்தால் தடையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 சதம் உள்பட 6215 ரன் குவித்துள்ளார்.