Home சினிமா 3 அடி மலைப்பாம்பு வளர்ப்பு... 'தல அஜித்' வீட்டில் வனத்துறை அதிரடி சோதனை?!

3 அடி மலைப்பாம்பு வளர்ப்பு… ‘தல அஜித்’ வீட்டில் வனத்துறை அதிரடி சோதனை?!

படம் குறித்த தகவல் வெளியானாலே அதை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி விடுவார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் இவரின் படம் குறித்த தகவல் வெளியானாலே அதை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி விடுவார்கள்.

ttn

தல அஜித் – ஷாலினி தம்பதிகளுக்கு அமோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் சென்னை திருவான்மியூர் வீட்டில் வசித்து  வருகிறார். 

ttn

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டில் மூன்று அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை   வளர்த்து வந்துள்ளனர்.அதற்கு எலிகளை உணவாக கொடுத்து வந்துள்ளார். இந்த செய்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து திருவான்மியூரில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு சென்று சுரேஷ் சந்திரா குறித்து விசாரித்த வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பு குறித்தும் சோதனை செய்ததாகவும்,  இதையடுத்து சுரேஷ் சந்திராவிடமிருந்து மலைப்பாம்பை கைப்பற்றியதாகவும் அவர் மீது வனவிலங்கு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. 

இதுகுறித்து கூறியுள்ள சென்னை வனச்சரகர் மோகன், ‘அஜித் வீட்டில் ரெய்டு நடந்ததாக வந்த தகவல் பொய்யானது. சமூக வலைதளங்களில் அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா  வீட்டில் பாம்பு வளர்க்கப்படுவதாக தகவல் வந்தது. ஆனால் இதுவரை அதுபற்றி வழக்குப்பதிவோ, விசாரணையோ, வாரண்டோ பெறப்படவில்லை’ என்று விளக்கமளித்துள்ளார். 

 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் முட்டைகள் இல்லை- அருங்காட்சிய காப்பாட்சியர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் போன்ற உருவம் குறித்த முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு...

மு.க.ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவபடிப்பில் அரசு பள்ளி...

பெண் ஆளுமைகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமை பணிகள்!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் இடமாற்றம் வழக்கமான ஒன்று தான் என்றாலும், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில...

நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இதுவே காரணம்! அமைச்சர் கடம்பூர் செல்லூர் ராஜூ

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருந்த விஜய் ரசிகர்களை சந்தித்து வருகிறார். விஜய்யின்...
Do NOT follow this link or you will be banned from the site!