3டி முறையில் ‘மோடி – ஷி ஜின்பிங்’ புகைப்படம் பதித்த சேலை : கலக்கும் நெசவாளர்கள்!

 

3டி முறையில்  ‘மோடி – ஷி ஜின்பிங்’ புகைப்படம் பதித்த சேலை : கலக்கும் நெசவாளர்கள்!

மோடியும் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்ப வளாகங்களைப் பார்வையிட்டனர்.

கடந்த அக்டோபர் 11, 12-ம் தேதி சீன அதிபர் ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தையை நடத்த மாமல்லபுரம் வந்திருந்தனர். அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து, மோடியும் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்ப வளாகங்களைப் பார்வையிட்டனர்.

Modi

அதனையடுத்து,  கோவளத்தில் உள்ள கலைப் படைப்புக்களைப் பார்வையிட்ட போது சீன அதிபர் ஜின்பிங்கின் முகம் பதித்த பட்டுச் சேலையை ஜின்பிங்கிடம் நெசவாளர்கள் காண்பித்தனர்.அதனைக் கண்ட ஜின்பிங் ஸ்தம்பித்து நின்றார். 

Saree

அதனைத் தொடர்ந்து, பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் நெசவாளர்கள் ‘மோடி – ஷி ஜின்பிங்’ முகம் பதித்த 3டி பட்டுச் சேலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதில், நேராகப் பார்த்தால் இருநாட்டுத் தலைவர்கள் படமும். சேலையின் பக்கவாட்டுப் பகுதியிலிருந்து பார்த்தால் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களும் தெரியும் படி வடிவமைத்துள்ளனர்.

Saree

இப்போதெல்லாம் பெரும்பாலும் முகம் பதித்த சேலையை உருவாக்கி வருகின்றனர். ஆனால், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 3டி முறையில் தயாரித்த நெசவாளர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

Saree